தமிழ் நாதம்

13 ஒழிப்புக்கான பிரேரணையை வழிமொழிந்தது ஐ.தே.கட்சி
இலங்கை அரசமைப்பை திருத்துவதற்கான பிரேரணையை (13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான) ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளர் வண. நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் நேற்று சபையில் சமர்ப்பித்தார்.

குறித்த பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார வழிமொழிந்தார்.

நாடாளுமன்றில் நேற்று ஆரம்பகட்டப் பணிகள் முடிவடைந்ததும் பிரேரணை கொண்டுவருவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால்  குறித்த பிரேரணை சபையில் முன்மொழியப்பட்டது.

இவ்வேளை, சபையில் ஆளுங்கட்சி அமைச்சர்களும்,  உறுப்பினர்களும் இருந்தாலும், அரசமைப்பைத் திருத்தக்கோரும் ஹெல உறுமயவின் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவே வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், குறித்த பிரேரணை மீதான விவாதம் பிறிதொரு நாளில் நடைபெறும். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குமாறு கோரும் பிரேரணையை அண்மையில் ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்தார் என்பது தெரிந்ததே.

அரசமைப்பின் 21ஆவது திருத்தமாக முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

காணியை மீட்டுத் தாருங்கள்
இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலகத்தினால் காணிக் கச்சேரி நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் பெரும்எண்ணிக்கையான பொதுமக்கள் பங்கெடுத்தனர். இதில் பங்கெடுத்த பொதுமக்கள் சிலர், இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள கெற்பேலிக் காணியை  மீட்டுத்தருமாறு கோரியுள்ளனர்.

காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவுக்குச் சொந்தமான 60 பரப்புக் கொண்ட இந்தக் கெற்பேலிக் காணியில் இராணுவத்தினர் தற்போது நிரந்தர இராணுவ முகாம் அமைத்து வருகின்றனர்.

குறித்த காணியைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தலும், யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு முன்னாள் உத்தியோகத்தர் இ.சிவசுவாமியின் கையொப்பத்துடன் ஒட்டப்பட்டிருந்தது.  குறித்த காணியை இராணுவத்தினருக்கு வழங்குவதற்குக் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த காணியில் தாம் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், போர் நடவடிக்கைகள் காரணமாகக் குறித்த காணியைவிட்டு வெளியேறியிருந்ததாகவும் மீண்டும் விவசாய நடவடிக்கைகளை தொடரப் போவதாகவும் மக்கள் பிரதேச செயலரிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணி, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமானது என்பதனால் மாவட்டச் செயலகத்தில் உள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுடன் சென்று கலந்துரையாடுமாறு பிரதேச செயலாளர் கூறியுள்ளார்.

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு 13 ஆவது திருத்தம் அல்ல; தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை
தென்னிலங்கை இனவாதக் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கின்றன. இதன்மூலம் 13 ஆவது திருத்தத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் நிரத்தரத்தீர்வு உள்ளது என்று அர்த்தம் ஆகாது.

இவற்றையும் தாண்டி பூகோள அரசியல் மாற்றத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

இது தொடர்பில் அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இன்று கடும் சர்ச்சைகள் தோன்றியிருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு தற்போதைய அரசியல் நிலைமைகளைத் தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

குறிப்பாக தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ள அரசியல் தலைவர்கள் முன்னரைப் போன்று வரலாற்றுத் தவறுகளை இனியும் இழைக்கக் கூடாது என்பது எமது கட்சியின் நோக்கமாகும். இது குறித்து காலத்துக்கு காலம் தாம் வலியுறுத்தி வருகின்றோம்.

தற்போது பல வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்ட 13 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

எமது கட்சியைப் பொறுத்த வரை 13 ஆவது அரசியல் திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எத்தகைய நன் மையும் கிடைக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம்.

13 ஆவது அரசியல் திருத்தம் முழுமையாக செயற்படுத்தப்பட்டால் அதுவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாகி விடும் என்று கருதிவிட முடியாது. நாம் பல தடவை 13 ஆவது திருத்தத்தில் எந்த பயனும் இல்லை என்று வலியுறுத்தியிருக்கிறோம்.

ஆனால் இந்தியாவின் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான சந்தர்ப்பமாக 13 ஆவது திருத்தத்தைக் காட்டுகின்றனர். இன்று அந்தச் சட்டம் கேள்விக் குறி ஆகியுள்ளது.

ஆனால் மாகாண சபைகளை ஆரம்ப புள்ளியாகக் கருதலாம் என்றும், கடவுள் கொடுத்த அரிய சந்தர்ப்பம் என்றும் கூறுமளவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், அதிலுள்ளவர்களும் மாறியுள்ளனர்.

எங்களைப் பொறுத்த வரையில் இந்த 13 ஆவது திருத்தம் தமிழர் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாகவோ, இடைக்காலத் தீர்வாகவோ, இறுதித் தீர்வாகவோ இருக்க முடியாது என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கின்றோம்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. சிங்கள தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதம் உச்சக்கட்டத்தில் உள்ளது. அந்த இனவாதம் தமிழ் மக்களுக் கென பெயரளவில் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தம் நீக்கப்படவேண்டும், பொலிஸ், காணி அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் என கூறிவருகின்றது.

இதனால் தமிழ் மக்களும் இந்த 13 ஆவது திருத்தத்தில் ஏதோ இருக்கின்றது என நினைப்பது ஆபத்தானது. எதிர்த்தரப்புக்கள் கூறும் கருத்துக்களுக்கு எதிர்வினையாக எங்கள் இருப்புக்கான முடிவு ளை எடுக்க முடியாது.

இவ்விடயத்தில் தமிழ் புத்தி ஜீவிகளுக்கும், ஊடகங்களுக்கும் பெரும் கடமையுள்ளது. 13 ஆவது திருத்தத்தின் ஆபத்துக்களை மக்களுக்கு தெளிவுபடுத்தி, இன்றுள்ள பூகோள அரசியல் நிலைமைகளையும் அதில் தமிழ் மக்களுக்குள்ள வாய்ப்புக்களையும், தமிழ் மக்களது அரசியல் பலங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவதனூடாக மக்களை அரசியல் மயப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் தலைமை தவறாக முடிவுகளை எடுப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.

இதன் மூலம் இன்று பூகோள அரசியல் மாற்றத்தினூடாக எமக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பான சூழ்நிலையை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்றுள்ளது.

லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல்
இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, இலங்கை அரச ஆதரவுக் காடையர்கள் தாக்கியுள்ளனர்.

லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதன்போதே இலங்கையைப் புறக்கணிக்க வலியுறுத்தி ஈழத்தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டின் பேரில், சிங்கக்கொடியேந்திய ஆர்ப்பாட்டக்காரர்களும், அப்பகுதியில் போராட்டம் நடத்தினர்.

திடீரென சிங்கக் கொடியேந்திய இலங்கை அரசு ஆதரவுக் காடையர்கள், ஈழத்தமிழர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தினர். இதன்போது பெண்கள், சிறுவர்களும் தாக்கப்பட்டனர்.

பிரித்தானியக் காவல்துறையினர் இலங்கை அரச ஆதரவாளர்களை தடுக்க முயன்றபோது அவர்களுடனும் மோதினர்.

இதையடுத்து வன்முறையில் இறங்கிய சிங்கக்கொடியேந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரித்தானியக் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

தற்காலிக தோல்வியே தமிழீழம்; கவிப் பேரரசு வைரமுத்து
தமிழ் மக்களே தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம் அது தற்காலிக தோல்வி தான் என  கவிப் பேரரசு  வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தர்மம் வெல்லும், தமிழ் வெல்லும் தமிழ் என்று செத்தது. தமிழ் என்றும் சாகாது. உலகத் தமிழர்கள் இருக்கும் வரை என்றும் வாழும்

அத்துடன்  உலகத்தில் உள்ள 10 மொழிகள் என்றும் அழியாது. அதில் ஒன்று தமிழ் மொழி. தெரிந்து கொள்ளுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் படைத்த மூன்றாம் உலகப் போர் நூல் அறிமுக விழா  உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் மதச் சச்சரவு போதகர் உட்பட 12 பேர் காயம்
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பிரதேசம் சுக்கான்கேணியில் நேற்றுக்காலை இந்து ஆலய நிர்வாகிகளுக்கும் மெதடிஸ்த மிஷன் திருச்சபையினருக்கும் இடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. இதில் மதபோதகர் ஒருவர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்தப் பகுதியிலுள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.  அதே சமயத்தில் அருகில் உள்ள மெதடிஸ்த திருச்சபை தேவாலயத்திலும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அப்போது திருச்சபையின் வழிபாடுகள் ஒலிபெருக்கி மூலம் நடைபெறுவதால் தமது பூசைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக  பிள்ளையார் ஆலய நிர்வாகிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதை அடுத்து வாய்தகராறு முற்றி மோதலாக வெடித்தது.

இதையடுத்து அந்தத் திருச்சபை தேவாலயமும் அதன் அருகில் இருந்த வீடொன்றும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பலரிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். சந்தேகத்தின் பேரில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆஸியில் ஈழ அகதிகள் மீது மீண்டும் தாக்குதல்
ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் உள்ள சன்சயின் பகுதியில் ஈழ அகதிகள்  மீது கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் மீண்டும் கொடூரத் தாக்குதலை மேற்கொண்டு அவர்களின் பொருள்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் ஈழ அகதிகள் இருவர் கடைக்கு சென்று விட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்தபோது கறுப்பினத்தைச் சேர்ந்த _மார் பத்து பேர் இவர்களை வழி மறித்துத் தாக்கியுள்ளனர்.

இதில் ஒருவர் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். மற்றைய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.   தாக்குதலுக்கிலக்கான ஈழ அகதியிடமிருந்த பெருந்தொகையான பணமும் ஐபாட் மற்றும் தொலைபேசி என்பனவற்றையும்  கறுப்பின நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த மாதம் முதலாம் திகதி குறித்த பிரதேசத்தில்  வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களின் வெறியாட்டத்தில் நான்குபேர் கத்திவெட்டுக்கு இலக்காகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் மணிவண்ணன் மறைவு கலை உலக பகுத்தறிவுப் போராளி மறைந்தார்! – வைகோ இரங்கல்
காலத்தால் அழியாத காவியங்கள் பலவற்றை இயக்கியவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான   மணிவண்ணன் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாகத் தாக்கிற்று. தாங்க முடியாத அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளானேன்.

எழுத்திலும் பேச்சிலும், அனைவரையும் வசீகரிக்கும் பேராற்றல் பெற்ற மணிவண்ணன், நடிகராகவும் முத்திரை பதித்தார்.

தமிழ் இன மீட்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட கலை உலகப் போராளி மணிவண்ணன், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்காகத் துணிச்சலுடன் ஆதரவுக்குரல் எழுப்பி வந்தார்.  தமிழ் ஈழ விடுதலைக்கான பயணத்தில் இன்னும் அளப்பரிய பணிகளைச் செய்யும் எண்ணமும், திறமும் கொண்டு, இந்த இலட்சிய ஏந்தல் உழைத்திடும் வேளையில், இயற்கை அவரைப் பறித்துக் கொண்டதை எண்ணுகையில், வேதனை மேலிடுகிறது.

திராவிட இயக்கத்தில் சோதனைகளை எதிர்கொண்டு நான் போராடியபோது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உருவான தொடக்க காலத்தில், இயக்குநர் மணிவண்ணன் எழுத்திலும், மேடைப் பேச்சிலும், தோள்கொடுத்துத் துணைநின்று, ஆதரித்த பண்பும் பாங்கு, என்றும் என் எண்ணத்தில் நிலைத்து இருக்கும். ஆண்டுகள் பலவாக அவருடன் பழகிய உன்னதமான நாள்களை நான் எப்படி மறக்க முடியும்?

அவரது மறைவு, பகுத்தறிவு இயக்கத்துக்கு, கலை உலகுக்கு, தமிழ் ஈழப் போர்க்களத்துக்கு ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து கண்ணீரில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரை நேசிக்கும் அனைத்துத் தமிழ் உள்ளங்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீரைக் காணிக்கை ஆக்குகின்றேன்.

‘தாயகம்’ வைகோ

சென்னை – 8 பொதுச்செயலாளர்

15.06.2013 மறுமலர்ச்சி தி.மு.க.

இந்துமயானத்தையும் சுவீகரிப்பதற்கு முயற்சி; எழுதுமட்டுவாழ் வடக்கு மக்கள் எதிர்ப்பு
எழுதுமட்டுவாழ் வடக்குப் பகுதியில் உள்ள இந்து மயானத்தை அரசு சுவீகரிக்கவுள்ள நிலையில் குறித்த மயானத்தைப் பயன்படுத்தும் 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

எழுதுமட்டுவாழ் ஆசைப்பிள்ளை ஏற்றத்துக்கு அருகில் 52 ஏக்கர் காணியில் நிரந்தர படைமுகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த காணிக்கு அருகில் உள்ள இரண்டு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட மயானக் காணிகளையும் சுவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் அதிகாரிகளுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர். வேறு இடத்தில் ஆலயக் காணியொன்றினைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் தாம் காலம் காலமாக பயன்படுத்தி வரும் மயானத்தை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரியும் அந்த மக்கள் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

ஒட்டுவெளி, கரம்பகம், மருதங்குளம், கல்யாணக்குளம், மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டம், எழுதுமட்டுவாழ் வடக்கு ஆகிய பிரிவுகளில் வாழும் ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் இந்த மயானத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை, எழுதுமட்டுவாழ் தெற்கில் கடந்த வருடம் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்குள்ள மயானப் பகுதி இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்படாததால் அந்த மக்களும் எழுதுமட்டுவாழ் வடக்கில் உள்ள இந்து மயானத்தையே பயன்படுத்தி வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

காணி சுவீகரிப்புக்கு எதிராக; வழக்குத் தாக்கல் செய்தோரின் விவரம் திரட்டுகிறது அமைச்சு
வலி.வடக்கு காணி சுவீகரிப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தவர்களின் விவரங்கள் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் மாவட்டச் செயலகம் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வலி. வடக்கில் இராணுவத்தினரால் 6 ஆயிரத்து 381 ஏக்கர் நிலப் பரப்பு சுவீகரிப்புச் செய்யப்படுவதை எதிர்த்து வலி.வடக்கு மக்கள் 2 ஆயிரம் பேர் வரை உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் மேற்படி வழக்குத் தாக்கல் செய்தவர்களினதும், அவர்களின் காணி உறுதி விவரங்களையும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக வழக்குத் தாக்கல் செய்தவர்களின் பெயர் விவரங்கள் யாழ். மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.