போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவை விட்டு போகுமட்டும் போராட்டம் தொடரும்
செயற்பாட்டாளர்கள் அறிவிப்பு. அனைத்து தமிழ் மக்களும் திட்டமிட்டபடி நாளை ஒன்று கூடுமாறு கேட்டுகொள்கின்றோம்.
06 ஆம் திகதி புதன்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 10:30 மணிக்கிடையில் உரையாற்றவுள்ளார்.
இந்த போர்க்குற்றவாளி மகிந்தவின் உரை லண்டனில் உள்ள மான்சன் கவுசில் (Mansion House, London, EC4N 8BH (Tube: Bank) நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, மகிந்தவுக்கான மதியவிருந்து பொதுநலவாய நாடுகளின் செயலகம் அமைந்திருக்கும் லண்டன் மால்பொறோக் கவுசில் (Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX (Tube: Green Park)) நடைபெறவுள்ளது.
அங்கே இனவழிப்புக் குற்றவாளி மகிந்தவுக்கு எதிராக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை 10:00 மணிக்கு முன்னர் மகிந்த உரையாற்றுவதற்காக அந்த வீதியால் ஊர்தியில் வரும்போதே எமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கவேண்டியிருப்பதால் அன்றைய நாள் காலை 9:00 மணிக்கு மான்சன் கவுசுக்கு முன்னால் எமது மக்கள் அனைவரும் அணியணிகாத் திரண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.








