5:00 am - Wednesday June 19, 2013

Fredericia ,நகரில் கற்றலுக்கான வழிகாட்டுதல் தினம் திசைகள் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்டது.

Fredericia , கற்றலுக்கான வழிகாட்டுதல் தினம் திசைகள் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்டது. தமிழ் இளையோருக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் டென்மார்க்கில் உள்ள உயர்கல்வி, மற்றும் பட்டப்படிப்புகள் பற்றிய தகவல்களையும், ஆலோசனைகளையும் வழங்குவதே இந்நிகழ்வின் நோக்கமாக இருந்தது.

உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்பு கற்றுக் கொணடிருக்கும் தமிழ் மாணவர்கள் இந்நிகழ்வுக்கு வருகை தந்து, தமது கல்விகளை பற்றிய தகவல்களையும், ஆலோசனைகளையும், தமிழ் மொழியிலேயே பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மருத்துவம் ((medicin), பொறியியல் (ingeniør), பொருளாதாரம் (økonomi), சர்வதேச அபிவிருத்தி internationale udviklingsstudier), வர்த்தக தொடர்பு (virksomhedskommunikation), பொது சுகாதார விஞ்ஞானம் (folkesundhedsvidenskab) அரசியல் அறிவியல் (statskundskab) மற்றும் பல கல்விகளை பற்றிய தகவல்கள் வருகை தந்திருந்தோருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் திசைகள் அமைப்பினரால் அழைக்கப்பட்டிருந்த இளம் தமிழ் மருத்துவர் ஒருவரால் நீரிழிவு நோயினை பற்றிய விளக்கங்களும், ஆலோகனைகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு வருகை தந்து, தம் கல்விகளை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டோருக்கும், வருகை தந்து சிறப்பித்த பெற்றோர்கள் மற்றும் இளையோருக்கம், திசைகள் இளையோர் அமைப்பினர் எமது நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு, இந்நிகழ்வு வருகை தந்திருந்த அனைவருக்கும் பிரயோசனம் உள்ளதாக அமைந்திருக்கும் என்றும் நம்புகின்றோம்.

இவ்வருடம் இரண்டாவது முறையாக இந்நிகழ்வு திசைகள் அமைப்பினரால் நடாத்தப்பட்டது. முதலில் Nyborg நகரில் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களிலும் இந்நிகழ்வை வௌ;வேறு நகரங்களில் நடாத்தும் நோக்கம் திசைகள் அமைப்பினருக்கு உள்ளது. எனவே உங்கள் நகரங்களில் இந்நிகழ்வை நடாத்த விரும்பினால், திசைகள் அமைப்பினரை தொடர்பு கொள்ளவும்.

afholdt Thisaigal studieorienteringsdag i Fredericia. Dagen havde til formål at oplyse tamilske forældre samt børn og unge om de uddannelsesmæssige muligheder de har. Thisaigal havde inviteret repræsentanter fra gymnasiale og videregående uddannelser til at holde om deres studier til gæsterne. På dagen var forskellige uddannelser repræsenteret, såsom økonomi, ingeniør, folkesundhedsvidenskab, medicin, internationale udviklingsstudier, statskundskab, virksomhedskommunikation. Desuden havde Thisaigal inviteret en færdiguddannet læge til at holde oplæg om sukkersyge. Thisaigal takker alle repræsentanter samt gæster for at have deltaget i vores arrangement og håber, at I også havde en lærerig dag. Thisaigal har i år afholdt studieorienteringsdag i Nyborg og Fredericia. Næste år har Thisaigal i sinde at afholde samme arrangement i andre byer. Hvis nogen byansvarlige har lyst til at et sådan arrangement skal finde sted i deres by, er I meget velkomne til at tage kontakt til thisaigal.

Filed in: டென்மார்க்

No comments yet.

Leave a Reply