9:36 pm - Wednesday June 19, 2013

படையினர் முகாமிட்டிருந்த இடங்களில் புதிய விகாரைகள் தோற்றம்

திருகோணமலை மூதூரில் தமிழ்,முஸ்ஸிம், கிருஸ்த்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியான பச்சநூர் மலையில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பச்சநூர் மூன்றாம் கட்டை பகுதியில் இப்புதிய விகாரை அமைக்கப்பெற்றுள்ளது. இது திருகோணமலை நகரத்திற்கு 5 கிலோமீற்றர் தெற்கே உள்ளது.
குறித்த பகுதியில் 6 சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்துவந்ததாகவும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 110க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றுவதற்கான முன்னோடி நடவடிக்கைகளாக, 63 ஆரம்பத் தர சிங்கள மாணவர்கள் கல்வி கற்பதற்காக சகல வசதிகளுடன் கூடிய பௌத்த மத்திய கல்லூரித் தரப் பாடசாலை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் பௌத்த துறவிகளின் அழுத்தங்களினுடாக கொழும்பு அரசாங்கம் தமிழர்க்குச் சொந்தமான காணிகளை அபகரிப்பது, பௌத்த விகாரைகளை அமைப்பதும், சிங்களக் கிராமங்களை உருவாக்குவதும், வீதி புனரமைப்பு என்ற பேரில் பெருமளவு காணிகள் அபகரிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் சில பொது இடங்களிலிருந்தும், தனியாருக்குச் சொந்தமான கட்டடங்கலிருந்தும் விசேட படையினர் தற்போதும் வெறியேறிய போதிலும், இவ்வாறான சிறியளவிலான பௌத்த விகாரைகள் காணப்படுகின்றது.
இவ்வாறு காணப்படும் அரச மரங்களையும், சிறிய பௌத்த விகாரைகளையும் அகற்ற முற்பட்ட போது, அதற்கு படைத்தரப்பினரிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான இடங்கள் ஒரிரு ஆண்டுகளில் பௌத்தர்களுக்குச் சொந்தமான இடமான மாற்றம் பெறலாம் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Filed in: தாயகம்/இலங்கை

No comments yet.

Leave a Reply