வடக்கில் இடம்பெறும் படையினர்களின் அடக்குமுறைகளின் தொடர்ச்சியாக நேற்றிரவு பருத்தித்துறை வியாபாரிமூலை என்ற இடத்தில்பொதுமக்கள் சிலர் படையினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் சிலர்படுகாயமடைந்துள்ளனர்.
படையினரின் தாக்குதலுக்குள்ளான பொதுமக்கள் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற போது, காவல்துறையினரும் அவர்களை மிரட்டியதுடன் படையினருக்கு எதிரான முறைப்பாட்டை ஏற்க முடியாது என்று கூறி அவர்களைத்திருப்பியனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் தலையீட்டால் இன்று முறைப்பாடுஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பருத்தித்துறை வியாபாரிமூலைக்கு நேற்றிரவு சென்ற படையினர் ஒரு நபரின் பெயரைக் கூறி விசாரித்தததாகவும்அவரைத் தெரியாதென்று கூறிய இளைஞர்களை படையினர் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இதனை அறிந்து அவ்விடத்திற்குச் சென்ற இளைஞர்களின் உறவினர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மூன்று இளைஞர்;களும் குடும்பஸ்தர்கள்சிலரும் படுகாயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை காவல்துறை நிலையத்தில் முறையிடச் சென்ற போது காவல்துறையினர் முறைப்பாட்;டைஏற்க மறுத்ததால் இவ் விடயம் சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து இன்று புதன்கிழமை சம்பவ இடத்திற்குச் சென்ற விநாயகமூர்த்தி பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களையும் அழைத்துக்கொண்டு காவல்துறை நிலையத்திற்குச் சென்றார். காவல்துறையினர் முறைப்பாடு எடுக்காத காரணம் என்ன என்று வினாவியதுடன், சம்பவம் ஒன்றில் பாதிக்கப்பட்ட மக்கள் முறைப்பாடு செய்ய வந்தால் அதனை ஏற்று விசாரணை நடத்த வேண்டியது காவல்துறையினரது கடமை என்பதையும் எடுத்துக்கூறினார். இவரின் தலையீட்டின் பின்னரேயே பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.








