9:31 pm - Monday December 22, 2014

ஒரு முன்மாதிரியாக தமிழர்கள் – டெனிஸ் பத்திரிகை புகழாரம்

தமிழர்கள்: தமிழர்கள் பண்பாடு, தோற்றம் மற்றும் புவியியல் ரீதியாக பூர்வீக டெனிஸ்காரர்களிடமிருந்து வேறுபட்டிருப்பினும், புவியியல் ரீதியாக டென்மார்க்கிற்கு நெருக்கமான நாடுகளில் இருந்து வந்த குடியேற்ற குழுக்களை விட இன்னும் நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதன் பொருட்டு, புலம்பெயர்ந்தோரின் வேலை மற்றும் கல்வி பயன்பாட்டில் அவர்களின் பங்களிப்பின் நிலையை பூர்வீக மக்களுடன் ஒப்பிடுவதன் மூலமாகவே நான் இங்கு ஒருங்கிணைப்பினை வரையறுக்கின்றேன் என்பதை வலியுறுத்துகின்றேன்.

தமிழர்களின் வெற்றிகரமான ஒருங்கிணைப்பிற்கு காரணம் அவர்கள் பல ஒருங்கிணைப்பு திட்டங்களில் பங்கேற்பதா? அதாவது டென்மார்க் நாட்டவர் போல் அவர்களும் இந்த நலன்புரி சமூகத்தில் கவனிக்கப்பட்டதனாலா? இல்லை, அதற்கு எதிர் மாறானதே உண்மை.

அவர்கள் இங்கு நன்றாக செயற்படவேண்டும், கிடைக்கும் வேலை எதுவெனினும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பார்கள். உதாரணமாக, ஊதியம் குறைவாக இருப்பினும் பத்திரிகை விநியோகம் போன்ற சில வேலைகளை செய்தல். இந்த சமூகத்திற்கு வெறும் பாரமாய் இருப்பதற்கு மாறாக, அவர்கள் நீதிநெறியுடன் காணப்படுகின்றனர். அத்தோடு அவர்கள் அவர்களின் பிள்ளைகள் பல்கலைக்கழக மட்டம் வரை படிப்படுதற்கு திறமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதை முன்னிட்டு அவர்கள் பெருமை கொள்கின்றனர்.

வரலாற்று ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த தமிழர்களின் வரலாறு பரீட்சயமானதே. இது டெனிஸ்காரர்களின் அமெரிக்க குடியேற்றத்தை நினைவுப்படுத்துகிறது. இன்றைய அமெரிக்கா 18ம் நுற்றாண்டில் இருந்த நலன்புரி அரசை விட மோசமாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு குடியேறிய டெனிஸ்காரர்கள் கிடைக்கும் வேலை எதுவெனினும் அதை செய்யவேண்டிய ஒரு நிலமைக்குத் தள்ளப்பட்டார்கள்.

குற்றங்கள் தொடர்பாக பார்க்கின்றபோது, தமிழர்கள் மேலும் டெனிஸ்காரர்களை நினைவூட்டுகின்றனர். குற்றம் மற்றும் குற்ற விகிதத்தை வைத்து பார்க்கும் போது, பாரிய குற்றங்கள் செய்யும் பிற குடியேற்ற குழுக்களோடு ஒப்பிடுகையில், இவர்களின் போக்குவரத்து குற்றங்கள் போன்றவை, அடிக்கடி நிகழும் சாதாரண குற்றங்களாகவே கருதப்படுகின்றன.

பலவீனமான தொழிலாளர் சந்தையே போர் அதிர்வுகளுக்கு காரணம் என்று சில குடியேற்றக்குழுக்கள் சொல்லிவருகின்றனர். ஆனால் இது ஒரு மோசமான காரணமாகும். டென்மார்க்கிற்கு குடிபெயர்ந்து வந்த பெரும்பாலான தமிழர்கள், இலங்கை யுத்தத்தின் காரணாமாக குடிபெயர்ந்தவர்களாவர். அத்தோடு சமகால லெபனான் நாட்டவர்கள், ஈரானியர்கள், ஈராக்கியர்கள் மற்றும் சோமாலியர்கள் போன்றவர்களை போலவே அவர்களும் போர் அனுபவங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய போர் அனுபவங்கள் இருந்தபோதிலும், டெனிஸ்காரர்களை போலவே தொழிலாளர் சந்தை மற்றும் கல்வி முறையில் தமிழர்கள் நன்றாக செயல்பட்டுவருகின்றனர்.

இதன் காரணமாக பிற அகதிகள், குடியேற்றங்கள் மற்றும் குடும்ப ஒருங்கிணைப்புக்களுக்கு தமிழர்கள் ஒரு முன்மாதியாக இருக்கக்கூடும்.

மேலும் சில துறைகளில், தமிழர்கள் டெனிஸ்காரர்களுக்கு கூட முன்மாதிரியாக காணப்படுகின்றனர். அதாவது, பல டெனிஸ்காரர்கள் கல்வி மற்றும் வீட்டுப்பாடங்களில் பெரிதாக அக்கறை காட்டாத போதும் அவற்றின் மீதான தமிழர்களின் பார்வை சாதகமாகக் காணப்படுகின்றது.

சில மாணவர்கள் முன்னேற்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டாத காரணத்தினால் சில கல்லூரிகள் கிட்டத்தட்ட இந்த விடயத்தை கைவிட்டுவிட்டன. இதற்கு தீர்வு காணும் வகையில் கல்லூரிகளிலேயே மாணவர்கள் தங்கள் வீட்டுப்பாடங்கள் செய்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே அதற்காக வீட்டிலிருந்தே தங்களை தயார்படுத்திக்கொண்டு வருவதன் மூலம், மாணவர்கள் தங்கள் அசௌகர்ய நிலையிலிருந்து தவிர்க்கப்படுகின்றனர்.

டெனிஸ் செய்தியை பார்வையிட இங்கே அழுத்தவும்

Filed in: டென்மார்க்

No comments yet.

Leave a Reply